கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி சார்பில் மியாவாக்கி முறையில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
- by admin
- Mar 05,2024
News
கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் காடுவெட்டி பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் முனைவர் இ.சோமசுந்தரம் அவர்கள்,கல்லூரியின் முதல்வர் முனைவர் த.சரவணன் அவர்கள், செயலர் முனைவர் மா.இராமசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
மியாவாக்கி காடு வளர்ப்பு முறைப்படிப் போதிய பாசன வசதியுடன் அடர் வனத்தை உருவாக்கும் பொருட்டு 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து காடுவெட்டி பாளையம் அரசு மழலையர் பள்ளியின் கட்டிட மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றது.