பழனி நெய்க்காரப்பட்டி, கொழுமம் மெயின் ரோடு அய்யம்பாளையம் அருகே வந்த லாரியும் தேங்காய் லோடு ஏற்றி வந்த வேணும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது. 

இந்த விபத்தில் தேங்காய் வண்டியில் முன் இருக்கையயில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்தில் பலி ஆகியுள்ளனர்.  வேனின் பின் பகுதியில் பயணித்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. லாரியில் இருந்த 2 பேர் சுதாரித்து கொண்டு குதித்ததால் உயிர் தப்பியுள்ளனர்.  

காவல் துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு உடுமலை மற்றும் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

விபத்திற்கு காரணம் என்ன என்பது போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் 

படம் & தகவல்: முருகேசன் - பாப்பம்பட்டி