இந்த ஆண்டு அட்சய திருதியை 2 நாட்கள் (22.4.2023-23.4.2023) கொண்டாடப்பட்டது.

 

இந்நாளில் தங்கம் வாங்கினால் வளம் செரும் என்ற நம்பிக்கையில் கோவையில் உள்ள சிறு பாரம்பரிய நகை கடைகள் முதல் முன்னணி நகை மாளிகைகள் வரை வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பியது. 

கோவை மாநகரில் அட்சய திருதியையின் முதல் நாளான சனிக்கிழமை மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

 

 

இதுகுறித்து தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- 

கோவை மாநகரில் அட்சய திருதியையின் முதல் நாளான சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு மொத்த விற்பனை 100 கிலோவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.