வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நாடு முழுக்க இயக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது என்றும் இந்த 75 ரயில்களில் 31 ரயில்கள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த ரயில்கள் இயங்கும் வழித்தடம் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையைக் கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் இயக்கவும் முடிவு செய்துள்ளனர். விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூரு முதல் கோவை, எர்ணாகுளம் சந்திப்பு முதல் சென்னை சென்ட்ரல் வரையிலும் வந்தே பாரத் வர உள்ளது. 

அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் செகந்திராபாத், பெங்களூரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான ரூட்களிலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.


இந்த தகவலை OneIndia Tamil பகிர்ந்திருந்தது.