கோவை லாரல் கல்வி குழுமங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா & கலை நிகழ்ச்சிகள்
- by admin
- Dec 18,2022
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் லாரல் கல்வி குழுமம் சார்பாக பெங்கலென் பப்ளிக் பள்ளி மற்றும் லாரல் மெட்ரிக் மேல் நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு வருட கொரோனா கால கட்டத்திற்கு பிறகு,லாரல் பள்ளி குழுமங்கள் சார்பாக 2022 ஆம் கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி ஆண்டு விழா லாரல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக லெவி மினிஸ்டரிஸ் நிறுவனரும் பிரபல கிறிஸ்தவ பாடகருமான ஜான் ஜெபராஜ், சவுத் இந்தியன் பைபிள் கல்லூரி பதிவாளர் சாமுவேல் ஜெகதீசன் ஆகியோர் குடும்பத்தினர்களுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் கேரல் குழுவினர் கிறிஸ்தவ பாடல்களை பாடினர்.தொடர்ந்து,பெங்கலென் மற்றும் லாரல் பள்ளி மாணவ,மாணவிகளின் விளையாட்டு,ஓவியம்,கல்வி,என பல்வேறு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட,மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில்பள்ளியின் தாளாளர் ப்ராங்க் டேவிட் மற்றும் பள்ளியின் இயக்குனர், ஆலோசகர் மற்றும் முதல்வரான மார்கரெட் தேவ கிருபை ,நிர்வாக இயக்குனர் அபிஷேக் ஜாக்சன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,ஊழியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.