இனி வீடுகளுக்கான கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனே பெறலாம்! அரசு திட்டம் துவக்கம்
- by David
- Jul 22,2024
Tamil Nadu
தமிழ் நாட்டில் முதல் முறையாக வீடுகளுக்கான கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டம் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் துவங்கப்பட்டது. 2,500 சதுர அடி வரையுள்ள மனையில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கான இந்த திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.
இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் முத்துசாமி கூறுகையில், இந்த திட்டம் மூலம் ஆன்லைன் வழியே விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் கட்டட உடனடி அனுமதி அளிக்கப்படும். ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும், என்று கூறினார்.
www.onlineppa.tn .gov.in எனும் இணையத்தளம் மூலம் இந்த பயனை வீடு கட்ட உள்ளவர்கள் அணுகி பெறலாம்.