கோவையின் பல்வேறு இடங்களில் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு இருந்தாலும் அதை பார்த்துவிட்டு அங்கேயே வாகனங்கள் நிறுத்துவதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

 

ஆனால் வேறு சில வாகன ஓட்டிகளுக்கு சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதை தவிர வேறு வழிகள் இருப்பதில்லை. 


கோவை மாநகரில் இன்று 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் முதல் கட்டமாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு எச்சரிக்கை விடுத்தும் எடுக்காத வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 


இந்த நடவடிக்கை பற்றி சில சமூக ஆர்வலர்கள் கூறுவது என்னவென்றால்:-

அதிக நேரம் நிற்கும் வாகனங்கள் எவை என்பதை கண்டறிந்து அதன் பதிவெண்களை கணக்கெடுத்து அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபட வேண்டும். அத்துடன் 30 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்படும் சாலையோர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறுகின்றனர். 


ஆனால் மற்றொரு தரப்பில் உள்ள வாகன ஓட்டிகள் கூறுவது என்னவென்றால்:-

வாகனங்கள் கோவையில் அதிகமாகி வருகின்றன. எனவே வாகன எண்ணிக்கைகளுக்கு ஏற்ப கோவை மாநகரில் வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளதா என்று கண்டறியவேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உள்ள சில கடைகளை தவிர பெரும்பான்மையான கடைகளில் வாகன நிறுத்துமிட வசதிகள் இருப்பதில்லை. இதனால் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரமாக தான் நிறுத்த வேண்டி உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று மாநகராட்சி பார்க்கவேண்டும். 

இவ்வாறு மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.