நெற்றியில் நாமம் போட்டுகொண்டு கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அங்கன்வாடி ஊழியர்கள்!
- by CC Web Desk
- May 09,2025
தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்டத்தை சார்ந்த சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் (ஒய்வு பெற்றோர்கள் உடன்) சுமார் 50க்கும் மேற்பட்டோர் நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும் அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். பல ஆண்டுகளாக ரூ.2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய பொருளாதாரத்திற்கு போதவில்லை என்றும் எனவே தமிழக அரசு தேர்தலுக்குள் எங்களை அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.