கோவை காந்திபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் அங்கிருந்து பார்க் கேட், சித்தாபுதூர், டெக்ஸ்டூல் ஆகிய பகுதிகளுக்கு எளிதில் சென்றடையவும் ரூ.195 கோடி மதிப்பில் 100 அடி சாலையில் இருந்து சித்தாப்புதூர் வரையிலும், பார்க் கேட் முதல் டெக்ஸ்டூல் வரையிலும் இரண்டு அடுக்குகள் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டது.

மேம்பாலத்தில் ஏறுமிடம் இறங்குமிடம் ஆகியவை மட்டுமே உள்ள நிலையில் வேறு எங்குமிருந்து ஏறுதளம் இறங்குதளம் வழங்கப்படாமல் உள்ளது. மேம்பாலம் திறக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த வசதி வழங்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த மேம்பாலத்திலகாந்திபுரம் மேம்பாலத்தில் இரண்டு இறங்கு தளங்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இறங்கு தளங்களுக்காக பாரதியார் சாலை, 100 அடி சாலை ஆகிய இரண்டு பகுதிகளில் சுமார் 4,000 சதுரடி தனியார் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை துவங்க சொல்லி மாவட்ட நிர்வாகத்துக்கு நெடுஞ்சாலை துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி 90 % முடிந்த பின்பு அதற்கடுத்து உள்ள பணிகள் துவங்கும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.