10 ஆண்டுகளுக்கு பிறகு ... கோவை நாடக ரசிகர்களுக்கு விருந்தாக 'கோடை நாடக விழா' நடைபெறவுள்ளது
- by CC Web Desk
- Jun 18,2025
ஸ்ரீ மாருதி கான சபா கோவையில் துவங்கபட்டு அதில் இசை கச்சேரிகள், பரத நாட்டிய அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மிருதங்க இசைக்கலைஞர் தில்லையம்பல விஸ்வநாதன், ஒலி-ஒளி அமைப்பாளர் கிருஷ்ணன் முருகன் அவர்களின் சீரிய முயற்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலிருந்த மாருதி திரையரங்கம் இசை, நாட்டிய கலையரங்கமாக அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கோவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ மாருதி கான சபா மற்றும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை கோயமுத்தூர் மண்டலம் இணைந்து கோடை நாடக விழாவை நடத்தவுள்ளது. இது வருகின்ற 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி மேடை நாடக கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும்.
கோடை நாடக விழாவின் முதல் நாளான 21ம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு 'கலைமாமணி' காத்தாடி ராமமூர்த்தி வழங்கும் 'சிக்கல் சிவராமன்' நாடகமும், 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு டம்மீஸ் டிராமா குழவினர் வழங்கும் 'கபீத்வஜா' நாடகமும், மாலை 5 மணிக்கு தியேட்டர் மெரீனா வழங்கும் 'அந்நியள்' என்ற நாடகமும், மாலை 7 மணிக்கு 'ஆராதனை செய் மனமே' என்ற நாடகமும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் பா.ஹேமநாதன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.இந்த நாடகவிழாவின் துவக்கமாக கோவையை சேர்ந்த மூத்த நாடக கலைஞர் திரு.ஆனந்தசுப்ரமணியன் கௌரவிக்கப்பட உள்ளார்.
நாடகங்கள் நடைபெற உள்ள இடம் "ஸ்ரீ மாருதி கான சபா" எண்.8 பாஷ்யகாரலு தெரு, ஆர்.எஸ்.புரம்.
ஸ்ரீ மாருதி கான சபா இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகளை தொடருந்து நடத்திவருகிறது. அதற்கு ஏதுவாக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர் ஆண்டு சேர்க்கை சந்தாவாக ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் மற்றும் மேலும் தொடர்புக்கு: ஸ்ரீ மாருதி கானசபா - 9444443778, 9841184899.
படம் : 2024ல் சிக்கல் சிவராமன் நாடகத்தில் மூத்த நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்தபோது - நன்றி : தி இந்து - புகைப்படம் : ராகு. ஆர்.