வரும் ஞாயிறு (மே 7), ஆர்.எஸ்.புரம் பகுதியின் பிரதான சாலையின் ஒரு பகுதியில் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி நடக்க உள்ளது. 



இந்த நேரத்தில் அந்த சாலை பகுதி முழுக்க விளையாட்டுக்கும், பொழுது போக்குக்கும் பஞ்சம் இருக்காது. அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் நிகழ்ச்சி முடியும் வரை அனுமதிக்க படாது. சாலை மக்கள் கையில் தான். 



இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்டு விளையாடி மகிழலாம். இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. 



அதே போல கோவை ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் 'தி இந்து' நாளிதழ் சார்பில் 'கார்- பிரி சண்டே' எனும் நிகழ்ச்சி காலை 6 மணி  முதல் 9 மணி வரை நடைபெருகிறது. நிகழ்ச்சி நடக்கும் பகுதியில்  வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படாது. மக்கள் சாலைகளில் ஆங்காங்கே உள்ள விளையாட்டுகளில் பங்கேற்று மகிழலாம். 



இசை கச்சேரி, சைக்ளிங், ஸ்கேட்டிங்,நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் உண்டு.