உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி இன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கிழக்கு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படால் தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும் எனவும் அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்தனர்.


சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் அலு­வல் மொழி­யாக தமிழை அறி­விக்­கும் திட்­டத்தை உச்ச நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொள்ள­வில்லை என்­ப­தால், அதை செயல்­ப­டுத்த முடி­யாது என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.