மேற்கு மண்டல மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மழை பெய்துள்ளதை அடுத்து அடுத்த சில நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே உள்ளது.

"வரும் நாட்களில் மேற்கு மண்டல பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது" என கோவை வெதர் மேன் சந்தோஷ் கூறியுள்ளார்.

மழையானது மாலையில் இருந்து இரவு நேரங்களில் பெய்யக்கூடும் எனவும், இந்த மழை பரவலாக பெய்ய தற்போது வாயப்பிள்ளை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு மதிய நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என கூறிய அவர், வரும் மே மாதம் 2ம் வாரத்தில் இருந்து மேற்கு மண்டலத்தில் பரவலாக கனமலையை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்.