கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையில் காட்டு யானை தனியாக நீச்சலடித்து கரையை கடந்த வீடியோ காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

கேரள வனப்பகுதி அருகே இந்த அணை இருப்பதால், இதில் தண்ணீர் குடிக்க வனவிலங்குகள் வருவது வழக்கம். தற்போது அணையின் நீர்மட்டம் 51.25 அடியாக உள்ளது. இந்த நிலையில் கோடை வெயிலின் வெப்பம் தணிக்க மதிய நேரத்தில் இந்த அணைக்கு அருகே உள்ள கரைப்பகுதியில் ஒற்றைக்காட்டு யானை வந்துள்ளது.

அது அங்கு நீச்சல் அடித்துக்கொண்டே கரையின் ஒருபகுதியில் இருந்து மறுபக்கத்திற்கு சென்றுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.