கோவை அருகே உள்ள தாளியூர் பகுதிக்குள் இன்று (22.10.25) ஒற்றை காட்டு யானை புகுந்ததால் அங்கு இரவு நேரத்தில் மக்கள் அச்சமடைந்தனர். 

நள்ளிரவு 12.45 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தாளியூர்  ஊருக்குள் நுழைந்து உலாவியது. இதனால் அச்சமடைந்த மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊர் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.