வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  மேல் உள்ளது. சில நாட்களாக கோவை மாவட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. 

இந்த நிலையில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும் அருவியில் குளிகளாவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.