கோவையில் வெள்ளை களிமண்ணால் ஆனா மின்சாரமில்லா குளிர்சாதன பெட்டியை வாங்க மக்கள் ஆர்வம்!
- by David
- May 17,2023
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மன்சுக்பாய் பிரஜபதி என்பவர் களிமண்ணால் செய்யப்பட்ட மின்சாரம் இல்லாத குளிர்சாதன பெட்டியை உருவாக்கியுள்ளார்.
இப்படி பட்ட பெட்டியை கோவை கணபதி பகுதியில் வசிக்கும் கனகராஜ் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தற்போது இந்த குளிர்சாதன பெட்டியை ஆர்வமுடன் மக்கள் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இந்த 'மிட்டி கூல்' எனும் குளிர்சாதன பெட்டி மின்சாரம் இல்லாமல் இயங்குகிறது. இது நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே குளிர்விக்கப்படுகிறது. களிமண் குளிர்சாதனப் பெட்டியின் மேல் அறை, குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டில் மெதுவாகச் சொட்டி ஆவியாகி நீரை சேமிக்கப் பயன்படுகிறது.
இந்த ஆவியாதல் கணிசமான குளிரூட்டும் விளைவை உருவாக்க சுற்றுப்புறத்திலிருந்து ஆற்றலை ஈர்க்கிறது. உள்ளே இருக்கும் சேமிப்பு அறைகளில் இருந்து வெப்பத்தை அகற்றி அவற்றை குளிர்ச்சியாக வைக்கிறது.
தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் வைத்திருக்க முடியும் என இதை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர்சாதன பெட்டி வெள்ளை களிமண்ணால் ஆனது மற்றும் வழக்கமான பராமரிப்பு தேவையை நீக்கும் ஒரு எளிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த பேட்டி ஒன்றின் விலை ரூ. 8,500 லிருந்து விற்பனை செய்து வருவதாகவும் , உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.