கோவையில் சாலை விபத்தில் சிக்கி தவிக்கும் நபர்களின் உயிரை காக்க,அவர்களை விபத்து நடந்த பகுதியின் அருகில் தனியரோ அரசு மருத்துவமனையோ எந்த மருத்துவமனையாக இருந்தாலும் அதில் விரைந்து சேர்க்க காவல்துறையினர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சில தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு வரும் விபத்துக்குள்ளான நபர்களை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக எழுந்த குற்றச்சாட்டு மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி முன்பு வந்தது. 

 

 

இதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை பிரதிநிதிகளுடனும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுடனும் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

 

 

அதில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் வளாகத்திற்கு விபத்துக்குள்ளாகி வரும் நபர்களுக்கு எந்தவித தாமதமும் இன்றி சிகிச்சை அளிக்கவும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விபத்துக்குள்ளானவர்களை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Source: The Hindu