புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் இந்தியா, அமெரிக்காவுக்குப் பிறகு ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது, என கருத்து தெரிவித்தார்.

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ-வில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பேசினார். “தற்போது இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் பல ராக்கெட்டுகள் ‘விகாஸ் என்ஜின்’ மூலம் இயங்குகின்றன; அதனை உருவாக்கியதில் பங்காற்றியது எனக்கு பெருமை,” என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, 3 நாட்கள் தங்கவைத்து பின்னர் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் ககன்யான் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்; 2028க்குள் அது நிறைவேறும் என நம்புகிறேன் என கூறினார்