இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை புலியகுளம் பகுதியில் இருக்கும் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இக்கோயிலில்  உள்ள ஆசியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலைக்கு 4 டன் (4000 கிலோ) மலர்களால் ராஜ  அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் ஆகிய பூ மாலைகளை விநாயகருக்கு அலங்காரமாக அணிவிக்கப்பட்டுள்ளது.