வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சமையல் போட்டியில் பதக்கங்களை வென்று குவித்த கோவை ராமகிருஷ்ணா கலை கல்லூரி மாணவர்கள்
- by David
- Sep 24,2025
7வது சிகா கலினரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டி சென்னை வர்த்தக மையத்தில் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் முதல் உலக செஃப் சமுதாயங்களின் சங்க அங்கீகாரம் பெற்ற சமையல் போட்டியாக இது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.
செப்டம்பர் 19 முதல் 21 வரை நடைபெற்ற இப்போட்டியை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். துவக்க நிகழ்வில் பிரபல சமையல் கலைஞர்கள் செஃப். தாமு மற்றும் செஃப். சீதாராம் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் இந்தியா உட்பட மாலத்தீவு, இலங்கை, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து 3,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் மற்றும் பல சிறப்பு சான்றிதழ்கள் வென்றனர்.
தங்கம் வென்ற மாணவி சமீமா டி.எப்., மாணவன் சஞ்சய் பிரவீன்.பி., வெள்ளி வென்ற மாணவிகள் சம்யுக்தா ராஜு , சமீமா டி.எப்., ருக்கையா ஜுசர் மற்றும் வெண்கலம் வென்ற சமீமா டி.எப் மற்றும் ரிஷி எஸ்.ஜே. ஆகியோரை இக்கல்லூரியை நடத்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் முதல்வர் சிவகுமார் வெகுவாக பாராட்டினர்.
மாணவி சமீமா டி.எப். தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதகங்களை வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.