கோவை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் - டாக்ஸி ஓட்டுனர் இடையே மோதலால் பரபரப்பு!
- by David
- Mar 08,2025
கோவை அவிநாசி சாலை சிட்ரா பகுதியில் அமைந்துள்ள கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்திற்கு காரில் வரக்கூடியவர்கள் அதிகம்.
இங்கு பலரும் டாக்சி மூலமாக வந்து இறங்குவதும் ஏறி செல்வதும் உண்டு. இந்நிலையில் அவ்வாறு பயணிகள் ஏற்றிச் செல்லும் இடத்தில் வாகனம் நிறுத்துவதில் விமான நிலைய ஒப்பந்த ஊழியருக்கும் டாக்ஸி ஓட்டுனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மோதலை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சண்டையை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.