இரவு நேரத்தில் பணியை முடித்து விட்டு தனியாக வீட்டுக்கு அல்லது மகளிர் விடுதிக்கு திரும்பும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த கோவை மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தையும் கேட்டு பெற கோவை போலீசார் முயற்சி எடுத்துள்ளனர்.

எனவே இதுபற்றி பொதுமக்கள் கருத்துக்களை கூற ஒரு தனி இணையதள பக்கம் (Google Form) வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 கேள்விகள் உள்ளன. இதில் வெறும் இ-மெயில் ஐ.டி.யை மட்டும் பதிவு செய்து பதில்களை வழங்கலாம்.

அதில் இதற்கு முன்னர் வேலை முடித்து விட்டு தனியாக செல்லும் பெண்கள் ஏதாவது சவால்களை, சிரமங்களை, சங்கடங்களை எதிர்கொண்டனரா என்பதை தெரிவிக்கவும், இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு தொடர்பான அச்சம் நேர்ந்தால் புகார் தெரிவிக்க எந்த தொலைபேசியை அழைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவும், அவர்களின் இரவு நேர பயணத்தை பாதுகாப்பாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை பற்றியும் கருத்து தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அந்த படிவம் உள்ள இணையதளத்தை அணுக இந்த QR குறியீட்டை உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள Google Lens மூலம் ஸ்கேன் செய்யவும்: