கோவை மாவட்டம் நீலாம்பூர் முதல் மதுக்கரை இடையேயான 28 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்.அண்டு.டி பைபாஸ் சாலையில் இயங்கும்  5 சுங்க சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, மதுக்கரையில் உள்ள 1 சுங்க சாவடியை மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஒரு தகவல் படி, கோவை மாவட்ட பதிவு எண் கொண்ட தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

விரைவில் விரிவாக்கம்

எல்.அண்டு.டி பைபாஸ் சாலையில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்க வேண்டும், அதற்கு 2 வழி சாலையாக உள்ள இந்த சாலையை 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யவேண்டும் என பொது மக்கள் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மேம்படுத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.