கோவை சின்னியம்பாளையம் அருகே பேருந்து விபத்து, பல வாகனங்கள் மேல் மோதியதால் பரபரப்பு
- by David
- Jul 25,2025
Coimbatore
கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி பயணிகளுடன் இன்று மாலை 7:45 மணி அளவில் சின்னியம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதன் முன்னர் சென்ற 2 சக்கர வாகனம், கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பிரேக் பிடிக்காததால் வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு தகவல் படி இந்த விபத்தால் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.