கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒன்றிணைத்து, 'ஃபேமிலி ஃபுட்பிரிண்ட்ஸ்' என்ற பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பை நடத்தியது.

கல்லூரியின் முப்படையைச் சார்ந்த தேசிய மாணவர் படையினரின் சிறப்பு அணிவகுப்புடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது.

கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் திட்ட கண்காட்சி, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பதிவுக்கான முகாம்கள், பொது மருத்துவ முகாம், சர்வதேச பல்கலைக்கழக அரங்குகள், ஊடாடும் மொழி அரங்குகள், ரோபோட்டுடன் உரையாடுதல் மற்றும் ஹாப்பி ஸ்ட்ரீட் ஆகியவை இடம்பெற்றன.

இந்த கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் பியஸ்ட்டா என்ற சர்வதேச தொழில்நுட்ப-கலாச்சார விழாவின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர் கொண்டாடட்டதோடு அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவுற்றது.