கோவை கார்போரேட்ஸ் லீக் (KCL) கிரிக்கெட் போட்டி என்பது கோவை மாவட்டத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகும். 

இது செப்டம்பர் 16ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கோவையோ கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதன் துவக்கவிழா இன்று கே. பி .ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதை  கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரி முதல்வர் M.ராமசாமி துவக்கிவைத்தார்.

இந்த போட்டியில் கோவை மாவட்ட பன்னாட்டு நிறுவனுங்களான எலெவின்ட், கணினி, ஜியோ, தாட் ஒர்க்ஸ், ஆர்.பி.எம் ஏக்லீஸ், கவின் இன்ஜினியரிங், கீர்த்திலால், மஹதி, கே.ஜி.ஐ.எஸ்.எல் மற்றும் பல நிறுவனங்களின் கிரிக்கெட் அணிகள் உட்பட மொத்தம் 80 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இப்போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெரும் அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும்.