தீபாவளியன்று இந்த நேரங்களில் மட்டும் தான் பட்டாசு வெடிக்கவேண்டும்! அரசு உத்தரவு வெளியானது
- by David
- Nov 01,2023
Tamil Nadu
தீபாவளி அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகிற நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுபடி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.