தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது. 

25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர்-9 சீ. ஜெயச்சந்திரன் கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்(டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


விரைவில் இந்த புதிய பொறுப்புகளை சம்மந்த பட்ட அதிகாரிகள் ஏற்பார்கள் என்று தெரிகிறது.