செப்டம்பர் 9ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கோவையில் மீண்டும் சுற்றுப்பயணம்
- by David
- Aug 22,2025
Coimbatore
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் கோவையில் துவங்கினார்.
மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட பிற இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் அடுத்த மாதம் கோவை வரவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், அது தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதன் படி அவர் வரும் 9.9.25 அன்று தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 10.9.25 அன்று பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களிலும், 13.9.25 அன்று சிங்காநல்லூர், சூலூர் மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.