ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
- by David
- Aug 20,2025
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் ஸ்டுடென்ட் ஆப்யர் செல் தலைவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கினார்.
முதலாம் நாள் விழாவிற்கு, அர்ச்சனா யாதவ், குளோபல் புரோகிராம் மேனேஜர், ஜூனிபர் நெட்வொர்க்ஸ், பெங்களூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், தொழில் நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும் இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன் டிரஸ்ட் மற்றும் கல்லூரி நிறுவன சாதனைகள் மற்றும் கல்லூரியில் வீற்றிருக்கும் பல்வேறு குழுக்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக. இக்கல்லூரியில் 1997-2001 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவி பிரியதர்ஷினி, இயக்குனர். நியூயார்க் வங்கி சென்னை மற்றும் ஜூனிபர் நெட்வொர்க்ஸ் தகவல் மேம்பாட்டு பொறியியல் துறை இயக்குனர் ஹரீஷ் குமார் கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
மேலும், இப்போது பயின்று கொண்டிருக்கும். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழும் பரிசும் வழங்கினார்கள்.
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறையில் ஜூனிபர் நெட்ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் செயற்கை நுண்ணறிவு சிறப்பு ஆராய்ச்சி மையத்தை சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி துறையில் ஆராய்ச்சி மற்றும் இண்டஸ்ட்ரியல் ப்ராஜெக்ட் செய்வதற்கு இம்மையம் பெரிதும் உதவி புரியும். விழா இறுதியில், ஸ்டுடென்ட் ஆப்யர் செல் செயலாளர் கைலாஷ் நன்றி கூறினர்.



