கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் 10 முதல் 15 வயதுக்குள் உள்ள 400 பள்ளி மாணவர்களிடம் நடைபெற்ற ஆய்வில், அவர்களில் 16% பேருக்கு பெரியவர்களுக்கு 40 வயதில் வரக்கூடிய டைப் 2 டயபீடிஸ் எனும் சர்க்கரை நோய் பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 மாணவர்களில் 6 முதல் 7 பேர் தூக்கமின்மைக்காக மருந்துகள் எடுத்துவருவதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு கோவை பி.எஸ்.ஜி.மருத்துவ கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. கிராம புற பகுதிகளில் உள்ள 10-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 400 பேரில் 16% பேரிடம்  இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளது என்றால், இதே ஆய்வு நகர புறங்களில் உள்ள மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டால்!!!

டைப் 1 டயபீடிஸ் எனும் சர்க்கரை நோய் என்பது மரபணு சார்ந்தது. அது ஏற்படுவது நம் கையில் இல்லை. ஆனால் டைப் 2 டயபீடிஸ் எனும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதும் ஏற்படாமல் போவதும் பெருமளவு நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நல்ல உணவும் வாழ்க்கைமுறை பழக்கங்களும் இருந்தால் டைப் 2 டயபீடிஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

எனவே பெற்றோர்களே, குறிப்பாக நீங்கள் நகரத்தில் உள்ளீர்கள் என்றால், உங்கள் குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை, உப்பு, மாவு சத்து (CARBOHYDRATE) உள்ள ஸ்னாக்ஸ், உணவுகள், இனிப்புகள், ஜூஸ் ஆகியவற்றை வாங்கி தரவேண்டாம். அதை மிக மிக குறைந்த அளவில் கொடுத்து பழகுங்கள். அதே போல செல்போன், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்த அனுமதியாதீர்.

பள்ளிகளில் விளையாட அனுமதியுங்கள். ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ்-ல் உடற்பயிற்சிக்காக அவர்கள் விளையாட வழி செய்து கொடுங்கள். நேரத்தில் தூங்க பழக்குங்கள். பழங்களை சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். பீசா, பர்கர், ஐஸ் கிரீம், உருளை கிழங்கு சிப்ஸ், துரித உணவு கடைகளில் விற்கும் பிரைட் சிக்கன், பிரெஞ்சு பிரைஸ் ஆகியவற்றை உண்ணுவதை விரும்புகின்றனர் என்றால் அதை அவர்கள் கைவிட முயற்சிகளை இன்றே எடுங்கள்.

Credits : Dinamalar and iStock Photos