கோவையில் உள்ள 4 ரயில் நிலையங்களில் தரமுயர்த்தல் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது
- by David
- Aug 20,2025
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு ரயில் நிலையம், சோமனூர், இருகூர் மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்களில் சில தரமுயர்த்தல் பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே தரப்பில் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன் படி, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் (வடகோவை)கூடுதலாக உயர்ந்த அளவில் ஒற்றை பிளாட்பார்ம் அமைக்கவும், இந்த நிலையம் வழியே செல்லும் ரயில்கள் பின்பற்ற வேண்டிய நிரந்தர வேக கட்டுப்பாட்டு (Permanent Speed Restriction) அளவை மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 60 கிலோமீட்டர் உயர்ந்த தேவையான வசதிகளை செய்ய சுமார் ரூ.1.89 கோடி மதிப்பில் ஒரு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டவாளத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் வேகத்தை நிர்வகிக்க இப்படிப்பட்ட நிரந்தர வேக கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. இதை உயர்த்த நிலையத்தில் செய்யவேண்டிய பணிகள் டெண்டரில் அடங்கியுள்ளது.
அதே போல, சோமனூர் மற்றும் இருகூர் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் உயரத்தை அதிகரிக்கவும், சிங்காநல்லூர் ரயில் நிலையத்தினை மேம்படுத்தவும், அங்கு ஆப்டிகல் ஃபைபர் தொலைத்தொடர்பு வசதிகளுக்காக பிரத்தியேக அறை அமைக்கவும் சுமார் ரூ.8.9 கோடி மதிப்பில் 1 டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் இதற்கான தங்கள் தரப்பு இ-டெண்டர் கொடுக்க 11.9.25 தேதி கடைசி நாள். அன்று மதியம் 2 மணிக்குள் டெண்டரை தாக்கல் செய்யவேண்டும்.