தங்கம் விலை இனி இந்த காரணத்தால் மீண்டும் உயர வாய்ப்பு!
- by David
- Aug 01,2024
உலக நாடுகளில், முக்கியமாக அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் உள்ளூர் சந்தை வரை தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை.
அமெரிக்காவின் பணவீக்க அளவு அந்நாட்டின் மத்திய வங்கி நிர்ணயித்த அளவீட்டுக்குக் குறைவாக வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இப்போது அங்குள்ள பென்ச்மார்க் வட்டி விகிதம் (5.25 முதல் 5.5%) அடுத்தமாதம் குறைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைந்தால் அந்த நாட்டின் பத்திர சந்தை, பங்கு சந்தைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் தங்கத்தின் மீது திரும்ப வாய்ப்புள்ளது. இதுபோல் முன்னர் நடைபெற்றுள்ளது. இது செப்டம்பர் மாதம் நடந்தால், உலக அளவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, ரூ.51,440 ஆக உள்ளது.