தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.

குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை எழுத தமிழகம்  முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் 50,144 பேர் விண்ணப்பித்தனர்.

கோவையில்100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 37,830 தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 12,314 பேர் தேர்வு எழுதவில்லை.