தமிழில் வண்டியின் பெயரை அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வைப்பதை காண்பது அரிது.

அந்த வகையில் டி.வி.எஸ்.நிறுவனம்  அதன் பிரபல தயாரிப்பான ஸ்கூட்டி பெப் +  எனும் ஸ்கூட்டர் வகை வண்டியை உருவாக்கி 30 ஆண்டுகள் நெருங்கியதை நினைவு கூறும் வகையிலும், தமிழ் நாட்டில் இந்த 2 சக்கர வாகனத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பை கொண்டாடும் விதமாகவும் அந்த நிறுவனம் தமிழில் பெயர் கொண்ட  ஸ்கூட்டி பெப் +  ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

2 சக்கர வாகனம் வாங்க விரும்புவோரின் முதல் தேர்வாக உள்ள இந்த ஸ்கூட்டர் உள்ளது. அதை குறிக்கும் வகையில் 'முதல் காதல்' என்ற பெயருடன் இந்த ஸ்கூட்டர் குறைந்த அளவில் 2021 வெளிவந்தது. 

இதை அதிகம் பார்த்திருக்க பொதுவாக வாய்ப்புகள் குறைவே