கோவையில் குடியரசு துணை தலைவரின் பாதுகாப்பில் குறைபாடா?
- by admin
- Oct 28,2025
இன்று கோவை வந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதியம் டவுன் ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் 'தேச பிதா' காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.
கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் 2 சக்கர வாகனத்தில் 2 ஆண்கள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறிய நபர்கள் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அனீஸ், ஆஷிக் என்பது தெரியவந்துள்ளதாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் மேல் ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது. இவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவத்தால் குடியரசு துணை தலைவரின் பாதுகாப்பில் குறைபாடு என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை எனவும் கோவை மக்கள் தான் தனக்கு பாதுகாப்பு எனவும் குடியரசு துணை தலைவர் கூறியுள்ளார்.




