கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தினர் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மை மாணவர்கள் இணைந்து ராசிபாளையம் மற்றும் அரசூர் கிராமங்களில் முதலாமாண்டு மாணவர்களுக்காக சமூக ஒன்றிணைதல் நிகழ்வை (சோசியல் இம்மெர்சன் புரோகிராம்) நடத்தினர்.

கிராம மக்களின் கலாச்சாரம், மரபு, வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரங்கள் பற்றிப் புரிந்துகொள்ளவதை நோக்கமாகக் கொண்டு நடந்த இந்நிகழ்வில் மாணவர்கள் மக்களுடன் இணைந்து கிராம வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொண்டனர். 

கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் அவர்கள் இதுபற்றி கூறும்போது   "இது போன்ற செயல்கள் மாணவர்களிடையே வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என்றார் . எந்த நிகழ்வில் கே பி ஆர் ஸ்கூல் ஆப் பிசினஸ் இயக்குனர்பேராசிரியர் திவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர் .