கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை அரசு தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்த ஆர்வமுள்ள நிறுவனங்கள் விருப்பத்தை தெரிவிக்க அழைப்பு
- by David
- Oct 31,2025
கோவை ஒன்டிப்புதூர் அருகே 20 ஏக்கர் நிலத்தில் உலக தரம் கொண்ட கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க திமுக தலைமையிலான தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 20.18 ஏக்கர் நிலத்தில் கிரிக்கெட் மைதானம், அதற்கு அருகே 10 ஏக்கரில் வர்த்தக வளாக கட்டிடம் அமையும். 
மைதானத்தில் மொத்தம் 25 முதல் 30 ஆயிரம் பேர் வரை மைதானத்தில் அமர முடியும். இத்துடன் கார்ப்பரேட் அமர்வு பகுதி, மீடியா/பத்திரிகையாளர்கள் பகுதி, வி.ஐ.பி. க்கள் அமரும் இடம், வீரர்களுக்கான தனி வசதி கொண்ட அரங்கம், விளையாட்டு நிபுணர்கள், நடுவர்கள் அறை இடம்பெறும். வர்த்தக வளாகத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி மற்றும் பல்வேறு விற்பனை பகுதிகள் இடம்பெறும். 
இதை அரசு - தனியார் கூட்டு முயற்சியில் உருவாக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் முடிவுசெய்துள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் வர்த்தக வளாகம் திட்டத்தை செயல்படுத்த ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்க முன் வரலாம் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. 
இதற்கான முமுன்மொழிவு மற்றும் திட்டத்துடன் தங்கள் விருப்பத்தை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் (24.11.25) மாலை 5 மணியை மிகாமல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 
இது குறித்த மேலும் தகவல்களுக்கு https://tidco.com மை அணுகவும். 

 
                     
                     
                     
                     
                    
 
						 
						 
						 
						 
						


 
						 
						 
						 
						 
						 
						