கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை - தகவல்!
- by David
- Apr 24,2023
Coimbatore
ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.