புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களுக்கு தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் பாராட்டு
- by admin
- Sep 13,2025
தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தின் பாராட்டுக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக்கூட்டம் கோயம்புத்தூர் லி மெரிடியன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பதிவாளர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலர் மற்றம் இயக்குநரும், தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தின் தலைவருமான சி.ஏ வாசுகி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வரவேற்புரையைத் தொடர்ந்து சிண்டிகேட் உறுப்பினர்களுக்குப் பாராட்டு நிகழ்வு நடந்தது.
ஸ்ரீ கிருஷ்ண கல்வி நிறுவனங்கள் தலைவர் எஸ். மலர்விழி; ஜேசிடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் ஆர். துர்கா சங்கர் ; ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மதன் ஏ. செந்தில்; கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் தரணிதரன்; பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி செயலர் அருட்தந்தை ராக் டொமினிக் எக்ஸ்படைட் ஜெரோம் அவர்களுக்கும் பாராட்டும் சிறப்பும் செய்யப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜவேலு அவர்களுக்குப் பாராட்டும் சிறப்பும் செய்யப்பட்டது. சிறப்பையும் பாராட்டுயும் ஏற்றுக்கொண்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ச்சியாக தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை இயக்கம், உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தலைவர் / செயலாளர் ஒப்புதல் வழங்கிய பிற விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.