இந்தியாவின் மிக பெரிய ரேஸ் டிராக்கில் ஒன்று கோவையில் உருவாகி வருகிறது!
- by admin
- Dec 27,2023
Coimbatore
கோவையில் CoASTT எனும் நிறுவனம் சார்பில் கருமத்தாம்பட்டியில் 3.8 கிலோமீட்டர் நீளத்துக்கு, 111 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பெரிய ரேஸ் ட்ராக் ஒன்று உருவாகி வருகிறது.
UKவை சேர்ந்த அபெக்ஸ் சர்கியுட் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரேஸ் ட்ராக் இந்தியாவின் மிகப்பெரிய ரேஸ் டிராக்குகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.
இந்த நிறுவனம் துபாய் விமான நிலையத்தையும் அமெரிக்காவின் மயாமி பகுதியில் உள்ள ரேஸ் டிராக்கையும் வடிவமைத்துள்ளது.
இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 2024 இல் இந்த பணிகள் முடிவடையும் என்று தகவல்கள் கூறுகின்றன.
கோவை செட்டிபாளையம் பகுதியில் 1.3 கிலோமீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே ஒரு ரேஸ் ட்ராக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: Autocar India