கோவை மாநகரில் உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் நாளை (11.11.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மின் தடை ஏற்பட உள்ள இடங்கள்:-

துடியலூர் துணை மின் நிலையம்: துடியலூர், வடமதுரை, அப்பநாய்கண்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன்புதூர், பண்ணிமடை, தாலியூர், திப்பனுர், பாப்பாநாய்கண்பாளையம், கே.என்.ஜி. புதூர் மற்றும் வேணுகோபால் ஹாஸ்பிடல்.

 

எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்: எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், சுங்கா நகர், பெத்தேல் நகர், ஒண்டிப்புதுார் (ஒரு பகுதி) ஒண்டிப்புதூர் - திருச்சி ரோடு மற்றும் வி.கே. என்.நகர்.