மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக துணை மின் நிலையங்களில் நடைபெறும் மின் நிறுத்தம் நாளை (24.7.25) கோவை மாநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் எங்கும் நடைபெறுவதாக அறிவிப்பு இல்லை.

அதே சமயம் மாவட்ட பகுதியில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் இப்பணிகள் நடைபெற உள்ளதால், அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

பீடம்பள்ளி துணை மின் நிலையம்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னக்கலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம்,பள்ளபாளையம்.