பழனி மலையின் உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் எளிதில் சென்றுவர ரோப்கார் சேவை வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் சேவை நிறுத்தப்படும்.

அதன்படி வரும் ஜூலை 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் இந்த நாட்களில் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.