2050க்குள் கோவை கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று கோவையில் நடைபெற காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். 

 

 

மேலும் அவர் தானியங்கி மஞ்சப்பை மற்றும் துணிப்பை விற்பனை எந்திரத்தை துவக்கி வைத்து பைகளை வழங்கினார்.

 

 

அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

 

 

கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதனை அதிகப்படுத்த உள்ளோம். 

 

கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 10 கோடி மரங்கள் நடவு செய்யப்படும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

 

வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். 

 

அதனை மீறி வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் அதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். 

 

மரங்களை நடவு செய்வது மட்டும் முக்கியமில்லை. நட்ட மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும். 

 

 

இவ்வாறு அவர் கூறினார்.