கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், மனிதவள மேம்பாட்டு மாநாடு கல்லூரி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. 

ஐசிடி அகாடமி இணைந்து நடத்திய விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் R. சுந்தர், விழாவிற்கு தலைமை வகித்தார். 

மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக சால்காம்ப் மேனுபாக் சேரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு. அருள்பிரபு பொன்னுசாமியும், கௌரவ விருந்தினராக ஐசிடி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் வெங்கட்ராமனும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஹெச்சிஎல் குவி, க்ராப்டன் இந்தியா, லெனோவா, எச்டிசி குளோபல் சர்வீசஸ், கிண்ட்ரில் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பேண்டோம் எப்.எஸ்., முருக்கப்பா குழுமம் போன்ற 25க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் பல முன்னணி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


சுமார் 1500 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வுகள் மூலம், மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறவும், யோசனைகள் மற்றும் தரவு பரிமாற்றம் செய்யவும், தொழில் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

மேலும், ஐசிடி அகாடமியில் பல்வேறு துறைகளில் பயிற்சி மேற்கொண்டு சான்றிதழ்கள் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் துறை தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் ஏ. முருகராஜன், வேலைவாய்ப்பு குழுவில் இருந்த பிரதீப், டாக்டர் பிரவீன், ஐசிடி அகாடமியின் துணைத் தலைவர்கள் சரவணன், ராகவ சீனிவாசன் ஆகியோர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.