வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ. 50 லட்சம் நிதி
- by David
- Aug 01,2024
News
கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நேற்று நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் வழங்கிய நிலையில்,
நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
தனது X தளத்தில் இந்த துக்க சம்பவம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்," என சூர்யா கூறியிருந்தார்.