கோவை மாநகரின் பொது இடங்களில், மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என கோவை மாநகராட்சி தரப்பில் ஓர் ஆண்டுக்கும் முன்பே தடை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காந்திபுரம் 100 அடி ரோடு வழியே ஆவரம்பாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் தூண்களில் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டபட்டு வருகிறது.
கொஞ்சகாலம் தடையை ஏற்று இங்கு சுவரொட்டிகள் ஒட்டப்படாமல் இருந்த நிலையில் தற்போது விதிமீறல்கள் மீண்டும் அரங்கேற துவங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இதே மேம்பாலத்தின் தூண்களில் ஒட்டபட்ட போஸ்டர்களை கோவை மாநகராட்சி அகற்றியது. மேலும் போஸ்டர்கள் ஓட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தது. இதனால் சில காலம் தூண்கள் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.