கோயம்புத்தூர் சூலூரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் ஒப்பந்தபுள்ளிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) கோரியுள்ளது.

 

 

ஆர்வமுள்ள ஆலோசனை நிறுவனங்கள் டெண்டரை https://tidco.com & www.tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டெண்டர்கள் www.tntenders.gov.in மூலம் 26.06.2023 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன் பதிவேற்றம் செய்யப்பட்டு 27.06.2023 அன்று மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும் என்று டிட்கோ தெரிவித்துள்ளது.